கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அனுப்பி வைத்தார். கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5000 போர்வைகள், 5000 வாட்டர் பாட்டில்கள் மட்டும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ
உபகரணங்கள், நாப்கின் போன்ற பல்வேறு பொருட்களை மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் மீண்டும் அனுப்பி வைக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.