சென்னை, கலைவாணர் அரங்கம் வளாகத்தில் உள்ள மாநில செய்தி நிலைய கூட்டரங்கில் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் பெ. சாமிநாதன் தலைமையில்,செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஆறு மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு. இரா.செல்வராஜ் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
