2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விக்கிரவாண்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இரந்து தன்னை விடுவிக்க கோரியும், வழக்கு விசாரணைக்க நேரில் ஆஜராவதில் இருந்து விலக்க அளிக்க கோரியும் சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், இந்த வழக்கு விசாரணையில்; தொடர்ந்து நீதிமன்ற படி ஏறினால்தான் சீமானுக்கு நிதானம் வரும். அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும். அடுத்தவரை எரிச்சலூட்டும் வகையில் பேசுவதுதான் சீமானுக்கு வழக்கமாக உள்ளது என கூறியதுடன், வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்ததுடன், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும், அவரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது எனவும் உத்தரவிட்டார்.