“மிக்ஜம் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
காரப்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதேபோல், பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதைதொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம்
தீயணைப்புதுறையினர் மீட்டனர்.( நடிகர் அமீர்கான் தனது தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்து தங்கி உள்ளார்), தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட நடிகர்கள் விஷ்ணு விஷால், அமீர் கான் ஆகியோரை நடிகர் அஜித்குமார் நலம் விசாரித்தார். இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், ஒரு பொதுவான நண்பர் மூலம் எங்கள் நிலைமையை அறிந்த பிறகு, எப்போதும் உதவிக்கரம் நீட்டும் அஜித் சார் எங்களைப் பார்க்க வந்து எங்களுடன் எங்கள் வீட்டில் உள்ள பட குழுவிற்கும் பயண ஏற்பாடுகளில் உதவினார்… லவ் யூ அஜித் சார், என்று பதிவிட்டுள்ளார்.