தமிழ்த்திரைப்படங்களில் சென்னையை காட்ட வேண்டும் என்றால் அண்ணா சாலையில் உள்ள 11 மாடி கட்டிடமான எல்ஐசி கட்டிடத்தை காட்டுவார்கள். அந்த அண்ணாசாலை சென்னையின் இதயம் போன்ற பகுதி, முக்கிய அலுவலகங்கள், அதையொட்டி வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.
மகேஸ் லைக்
நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக இன்று காலை முதல் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. அண்ணா சாலைக்கு வங்க கடல் பொங்கி வந்து விட்டதோ என்று அஞ்சும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தி இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
வழக்கமாக இந்த காட்சிகளை வெளிநாடுகளில் தான் பார்க்க முடியும். இன்று சென்னையில் கார்களை வெள்ளம் அடித்து சென்ற காட்சிகளை பார்க்க முடிந்தது. இந்த வெள்ளம் எப்போது வடியுமோ என்ற ஏக்கத்தில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து போய் உள்ளனர். சாலையோரத்தில் வசித்து வந்த மக்கள் ஆங்காங்கே உள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.