சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட வேண்டிய விமானம் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று பிற்பகல் விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் விபத்தில் இருந்து பயணிகள் தப்பினர்.
