தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ரவி இன்று உரையாற்றினார். அதில் தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான திட்டங்கள் விரிவாக கூறப்பட்டு இருந்தது. வழக்கமாக காகிதத்தில்அச்சிடப்பட்ட உரையை வாசிப்பார். இந்த ஆண்டு காகிதம் இன்றி கம்ப்யூட்டரில் உள்ள உரையை அப்படியே கவர்னர் வாசித்தார்.
கவர்னர் ஆற்றிய உரையில் இடம் பெற்ற அம்சங்கள் வருமாறு:தரமான உயர்கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல அரசு உறுதி பூண்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை அரசு பாதுகாத்து வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 3 லட்சம மாவர்கள் பயனடைந்து வருகிறது. 2,500 கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திமுக அரசு பதவியேற்ற பிறகு 16 ஆயிரம் சிறு”தொழில்கள் தொடங்க கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழூநாடு உறுதியாக உள்ளது. நாட்டில் முதல் முறையிாக சென்னையில் சர்வதேச அளவிலான செஸ் போட்டியை தமிழக அரசு நடத்தியது- பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு பாராட்டுக்கள். காலை உணவு திட்டம் இந்தியாவுக்கு முன்மாதிரி திட்டம். 149 சமத்துவ புரங்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதுள்ள சென்னை நகரம் 5 மடங்கு விரிவாக்கம் செய்யப்படும். சென்னை அருகே துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 20,900 கி.மீ. நீள சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 5,904 சகிமீ பரப்பில் சென்னை நகரம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. வளர்ச்சிக்கேற்ற கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்வது அவசியமாகிறது. பரந்தூரில் விமான நிலையம் அமைச்ச அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.