சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரெயிலிலிருந்த 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தாம்பரம் செல்லும் புறநகர் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் கல்லூரி, அலுவலகம் செல்வோர் பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
