சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன்(52), இவரது மனைவி சுமதி(47). சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஜஸ்வந்த் குமார்(19), லிங்கேஷ்குமார்(17) ஆகிய 2 மகன்கள் உண்டு. டாக்டர் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி அளவுக்கு கடன் இருந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கினர். கடனை திருப்பி செலுத்தமுடியாமல் டாக்டர் பாலமுருகனும், அவரது மனைவியும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்த நிலையில் டாக்டர் பாலமுருகன், மனைவி சுமதி, மற்றும் 2 மகன்கள் என 4 பேரும் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். கடன் தொல்லையால் இவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சென்னை திருமங்கலம் போலீசார் விசாரிக்கிறார்கள். 4 பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டாக்டர், வழக்கறிஞர் குடும்பம் ரூ.5 கோடி கடனுக்காக தற்கொலை செய்தார்களா, ? கடன் கொடுத்தவர்கள் பெரும் கந்துவட்டி கும்பலா, அவர்களிடம் இருந்து மிரட்டல் எதுவும் வந்துள்ளதா,? டாக்டர், மற்றும் வழக்கறிஞர் ஆகிய இருவரும் கடைசியாக யாருடன் போனில் தொடர்பு கொண்டனர். கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.