வங்க கடலில் புதிதாக ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இது வரும் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி 25ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். 28ம் தேதி அது புயலாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி புயலாக மாறினால் அதற்கு பெங்கல் என பெயரிடப்படும்.
இந்த பெங்கல் புயல் 28ம் தேதி மதியம் 1 மணி அளவில் சென்னைக்கு அருகே நெருங்கும். இரவு 7 மணிக்கு கரையை கடக்க தொடங்கி இரவு 10 மணிக்குள் கரையை கடக்கும். அது சென்னையில் கரையை கடக்குமா, அல்லது சென்னைக்கும், புதுவைக்கும் இடையே கரையை கடக்குமா என்பது இன்னும் சில தினங்களில் துல்லியமாக தெரியவரும். இந்த புயல் சின்னம் காரணமாக 26, 27ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும். இந்த தகவல்களை தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.