Skip to content

சென்னை டெஸ்ட்….149 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்

  • by Authour

இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்கதேச அணி  வந்துள்ளது. சென்னையில் நேற்று முதல்டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ்வென்ற  வங்கதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர்கள்  பேட்டிங் செய்தனர்.  ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே  இந்தியாவின் 4 விக்கெட்டுகளை  வங்கதேச வீரர்கள் சாய்த்தனர்.

அதன் பிறகு  பேட்டிங் செய்ய வந்த ஜடேஜாவும், அஸ்வினும் நிலைத்து நின்று ஆடினர். நேற்று அஸ்வின்  102 ரன்கள் குவித்தார். ஜடேஜா 86 ரன்களுடன் இருந்தார். நேற்று ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 2ம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கியது. சிறிது நேரத்திலேயே ஜடேஜா அவுட் ஆனார். அஸ்வின் 113 ரன்னில் அவுட் ஆனார்.  376 ரன் எடுத்திருந்தபோது இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதைத்தொடர்ந்து வங்கதேசம் பேட்டிங் செய்தது.  இந்திய வீரர் பும்ராவின்  வேகத்தில் வங்கதேச வீரர்களின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.  மாலை 3 .15 மணி அளவில் வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. வங்கதேச வீரர் மெகிடி ஹசன் 27 ரன்கள் எடுத்திருநதாா. இதுதான் அந்த அணியின்  தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோர்.

இந்தியா தரப்பில் பும்ரா 4, சிராஜ்2, ஆகாஸ்தீப்2, ஜடேஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

முதல் இன்னிங்சில் இந்தியா 227 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!