தமிழகத்தில் கட்டுமான தொழில் மிகவும் பிரசித்தமானது. இந்த தொழில் மூலம் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். கட்டுமான தொழிலின் முக்கியமான மூலப்பொருள் மணல். தமிழகத்தில் இப்போது ஆறுகளில் மணல் எடுப்பது தடைபட்டுள்ளதால், அதற்கு மாற்றாக எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது.
ஆனாலும் எம். சாண்ட் நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிய வகையில் மணல் உற்பத்தி செய்யப்படுகிறது.
சென்னை மாநகராட்சி முதல் முறையாக கட்டிட கழிவுகளில் இருந்து மணல் உற்பத்தியை துவங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் சேகரிக்கும் கட்டட கழிவுகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் நாள் ஒன்றுக்கு தலா ஆயிரம் டன் அளவில் மறுசுழற்சி செய்யும் வகையில் இரண்டு பிளான்ட்டுகள் அமைத்துள்ளது.
கடந்த மூன்று மாதத்தில் 98 ஆயிரம் டன் கட்டிட கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உடைத்து நொறுக்கி மணல் தயாரிக்கப்படுகிறது. இந்த மணலுக்குசென்னை ஐஐடி அங்கீகாரம் கொடுத்துள்ளது. .ஆற்று மணலை விட இது விலை குறைவாகவும் தரமானதாகவும் உள்ளது.இந்த மணல் ஒரு டன் ரூ. 900 க்கு விற்பனை செய்யப்படுகிறது