சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் 63வது வார்டு உறுப்பினர் சிவ. ராஜசேகரன் உள்பட அனைவரும் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்துக்கு வந்திருந்தனர். ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். மோடி அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையைக்கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.