நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பதை கண்டித்தும், மற்றும் அதானி மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் சென்னையில் இன்று காங்கிரசார் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இதற்காக இன்று காலை சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் காங்கிரசார் திரண்டனர். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் மாநில தலைவர்கள், கவுன்சிலர்கள், வட்டார தலைவர்கள், மகளிர் அணியினர் என ஏராளமானோர் திரண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.