சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவிற்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கொலை வழக்கு குற்றவாளியாகவும், ரவுடி பட்டியலில் இருந்தவருமான செல்வப்பெருந்தகை போன்றவர்கள் கூறுவதற்கு பதில் அளிக்க முடியாது என விமர்சித்திருந்தார். அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின் சென்னை மத்திய கிழக்கு மாவட்ட செயலாளர் சிவ. ராஜசேகரன் தலைமையில் அக்கட்சியினர் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தின் போது அண்ணாமலையின் படத்தை காங்கிரசார் கொளுத்தினர்..
அண்ணாமலையின் படத்தை கொளுத்தி சென்னையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்..
- by Authour
