சென்னை காவல் ஆணையர் அருண், பதவியேற்றபோது “ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பதில் அளிக்கப்படும்” என பேட்டி அளித்தார். சென்னை காவல் ஆணையர் அருணின் இந்த பேச்சு குறித்து மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு கமிஷனர் அருண் தற்போது பதில் அளித்துள்ளார். அதில், எனது கருத்து மனித உரிமைகளை எந்த வகையிலும் மீறவில்லை. யாரையும் மிரட்டும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை. குற்றச் சம்பவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலே பேசினேன்” என்று அவர் கூறி உள்ளார்.