Skip to content

சென்னை… ஒரே நாளில் 7 பேரிடம் செயின் பறிப்பு சம்பவம்…. அதிர்ச்சி…

  • by Authour

சென்னையில் கடந்த சில நாட்களாக ஜெயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஒரே நாளில் சென்னையில் பல்வேறு இடங்களில் 7 பேரிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 15 சவரனுக்கு மேல் நகை பறிப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!