சென்னையில் நேற்று நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3-வது கொள்ளையன் பெண்களிடம் பறித்த நகைகளுடன் ரெயிலில் தப்பி செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர்.
ஆந்திரா ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொள்ளையன் தப்பி சென்ற பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிறுத்தப்பட்டது. தப்பி சென்ற 3-வது கொள்ளையனான சல்மானை ஓங்கோல் பகுதியில் ஆந்திர ரெயில்வே போலீசார் கைது செய்து சென்னை போலீசிடம் ஒப்படைத்தனர். அவனிடமும் போலீசார் தனி இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
என்கவுன்டரில் பலியான ஜாபர் குலாம் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஜாபர் குலாம் பயன்படுத்திய டூவீலர், கைத் துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். ஜாபர் மீது பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளது. இவன் இரானி கொள்ளை கும்பலை சேர்ந்தவன்.