திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி லால்குடி செல்லும் ரோட்டின் இருபகுதியிலும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப் பகுதியில் மான், குரங்கு, மயில், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனப்பகுதி விட்டு வெளியே வந்து கிராம பகுதிகளில் உணவு தண்ணீர் தேடி செல்வது வழக்கம். இந்நிலையில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தச்சங்குறிச்சி பகுதியில் ஒரமாக ஆண் புள்ளிமான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.மான் இறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறைக்கும் சிறுகனூர் காவல் நிலையத்திற்க்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு, வனத்துறையினர் விரைந்து வந்து. உயிரிழந்த ஆண் புள்ளி மானை மீட்டு சிறுகனூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனை அடுத்து வனத்துறையினர் புள்ளிமான் நாய் அல்லது பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கடித்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.