எங்க வீட்டுப்பிள்ளை உள்பட எத்தைனையோ சினிமாக்களில், அண்ணன், தம்பி உருவ ஒற்றுமையினால் ஏற்படும் குழப்பங்கள் சித்தரிக்கப்பட்டு உள்ளன. அது சினிமாவுக்காக எடுக்கப்பட்டது தானே என நினைத்துக்கொள்ளலாம். ஆனால் சென்னையில் அண்ணன் சான்றிதழை காட்டி வேலை வாங்கிய தம்பி 20 ஆண்டுகளுக்கு பிறகு தான் சிக்கி உள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் தனது அண்ணன் பன்னீர்செல்வம். இருவரும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருப்பார்கள். ஊதாரியாக சுற்றி வந்த பழனி தனது சகோதரன் பன்னீர்செல்வத்தின் சான்றிதழ்களை பயன்படுத்தி வேலை செய்து வந்தார். பின்னர் கடந்த 2002ம் ஆண்டு லூர்து மேரி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். லூர்து மேரியிடம் தான் பன்னீர்செல்வம் என்றும் தன்னை செல்லமாக பழனி என்று எங்கள் குடும்பத்தினர் அழைத்து வருவதாக கூறி வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் பன்னீர்செல்வத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதிலும் உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து 5 ஆண்டு சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்ததை கண்டு பன்னீர்செல்வம் என்ற பெயரில் சுற்றி வந்த பழனி தலைமறைவாகி விட்டார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பழனி தான் உண்மையான குற்றவாளி என்றும், அவரது சகோதரர் பன்னீர்செல்வத்தின் சான்றிதழ்களை பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பழனி தனது மனைவி மற்றும் நீதிமன்றம், போலீசாரை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.