சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கிருஷ்ணாம்பேட்டை மயான பூமி அருகே வசித்து வரும் ராஜேஷ்-ராதா தம்பதியரின் ஒரே மகன் தனுஷ் (24 வயது). குத்துச்சண்டை வீரர். போலீஸ் வேலையில் சேர தயாராகி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதி இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக தனுஷ் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதனால் காவல்துறை வேலைக்கு செல்ல முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவு தனுஷ் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்தமர்ம கும்பல் , தனுசை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றுள்ளது. இதை தடுக்க சென்ற அவரது நண்பர் அருணையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது. தகவலறிந்து வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் தனுசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த அவரது நண்பர் அருணையும் ஆஸ்பத்திரிக்க அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.