சென்னை, அயனாவரத்தில் அருண்குமார் என்ற காவலர் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அயனாவரத்தில் காவலராக பணியாற்றும் அருண்குமார் சீருடையுடனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பணிக்கு கிளம்பியவர் திடீரென தனது இல்லத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து
தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணிச்சுமை காரணமா? அல்லது குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனையாக என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தற்போது மற்றொரு காவலர் தற்கொலை செய்துகொண்டுள்ளது காவல்துறையினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.