சென்னை ஆவடியில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளை சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் வங்கி மேனேஜர் பரசுராம், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/gold7.jpg)