Skip to content

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு….

அண்ணா பல்கலைக்கழகம் சென்னையில் அமைந்துள்ள  ஒரு தொழில்நுட்ப பல்கலைக் கழகமாகும். அண்ணா பல்கலைக்கழகம் சென்னையானது கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அண்ணா கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி, சென்னை ஆகிய நான்கு கல்லுாரிகளை உள்ளடக்கியது. 2011 ஆம் ஆண்டு செப்டம்பா் 14 ஆம் நாள் பல்கலைக்கழகங்களை ஒன்றிணைக்க  ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணம் 50% உயர்ந்துள்ளது. ஒரு தாளுக்கு ரூ.150ஆக இருந்த தேர்வுக் கட்டணம் ரூ.225ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ1,000த்தில் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி உள்ளதால் ரூ.2,050 கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்ய ரூ.600 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் ரூ.900ஆக உயர்ந்துள்ளது. கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!