Skip to content

சென்னை….. அடையாளம் தெரியாத வாகனம் மோதி… அதிமுக நிர்வாகி பலி…

சென்னை மதுரவாயல் லட்சுமி நகர் சிந்தாமணி தெருவை சேர்ந்தவர் சரவணன் (41) இவர் மதுரவாயல் பகுதி அதிமுக மாணவரணி இணைச் செயலாளராகவும் பூத் கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார் என கூறப்படுகிறது. இவர் நேற்று தனது நண்பருடன் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து கொண்டு அம்பதுறை நோக்கி சென்று கொண்டிருந்தபோது. மதுரவாயல் மேம்பாலம் மீது அடையாளம் தெரியாத வாகன மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து இடித்து சென்ற வாகனம் எது என்பது குறித்து கோயம்பேடு போக்குவரத்துக் புலனாய்வு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என குறிப்பிடத்தக்கது….

error: Content is protected !!