கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1-க்கு வந்தது. அந்த விமானத்தில் 2 பெண்கள், பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அப்போது, அந்தப் பெண் பயணிகள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் சுங்க அதிகாரிகள், நாங்கள் சந்தேகப்பட்டால் உள்நாட்டுப் பயணியாக இருந்தாலும், நிறுத்தி சோதனை போடுவோம் என்று கூறினர். அந்த இரண்டு பெண் பயணிகளை அவர்கள் உடமைகளுடன், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள, சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
இதை அடுத்து 2 பெண் பயணிகளையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து, ரூ. 1.5 கோடி மதிப்புடைய 2.4 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 2 பெண் பயணிகளிடமும், சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.