சென்னையில் இன்று நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி இனறு ஒரு நாள் சென்னையில் நடைபெற்றது. இந்த வண்ணமயமான சாகச நிகழ்வில் விமானப்படையின் 72 விமானங்கள் கலந்து கொண்டன. இந்த சாகச நிகழ்வை சென்னை மெரினா மட்டுமின்றி, தெற்கில் கோவளம் முதல் வடக்கில் எண்ணூர் வரை கடற்கரைகளிலும், மொட்டை மாடிகளிலும் என சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரசித்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ஏர்ஷோ லிம்கா சாதனை புத்தகத்தில் நிகழ்வு இடம்பிடித்துள்ளது. ஏற்கனவே விமானப்படை சாசகம் டில்லி, பிரயாக்ராஜ், சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன. இந்த சென்னை ஷோவில் விமானங்கள் எண்ணிக்கை மற்றும் பார்வையாளர் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் சென்னை நிகழ்ச்சியே பிரமாண்டமாக அமைந்ததாக விமானப்படை பெருமிதமாக கூறியுள்ளது. சென்னை ஷோவை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் விமானப்படை தலைமைத் தளபதி அமர்ப்ரீத் சிங் ஆகியோர் நேரில் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடதக்கது..