மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. மணிக்கு 82 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றும் வீசுகிறது. இதன் காரணமாக சென்னையில் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை மீனம்பாக்கம் வர இருந்த 10 விமானங்கள் பெங்களூரு திருப்பிவிடப்பட்டன. 35க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 65 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை பலத்த காற்றும் வீசியதால் காலை 9.40 மணிக்கு விமான நிலையம் மூடப்பட்டது. 2 மணி நேரம் எந்த விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று இரவு 10 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.