வட சென்னை தொகுதி்யில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதில் திமுக, அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்நாள் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தொண்டர்கள் திரண்டு மோதல் உ ருவாகும் நி்லை ஏற்பட்டது. இதனால் அங்கு 2 மணி நேரம் பதற்றம் ஏற்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன.
அதே நேரம் தென் சென்னையில் தி்முக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது ஒருவரை ஒருவர் சந்தி்த்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்து
மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இரு வேட்பாளர்களுடனும் வந்த நிர்வாகிகள் தொண்டர்கள் இந்த காட்சியை பார்த்து நடப்பது நனபா, கனவா என அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
ஒரே மாநகரில் ஒரு புறம் கலாட்டாவும், மறுபுறம் கட்டிப்பிடித்தலும் நடந்த சம்பவம் தேர்தல் களத்தில் வினோதமாக காணப்பட்டது.