Skip to content
Home » நகை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி…. சேலம் தம்பதி மீது வழக்கு

நகை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி…. சேலம் தம்பதி மீது வழக்கு

  • by Authour

திருச்சி உறையூர் சண்முகா நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன்  மனைவி ஜோதிக்கும் ( 41) சேலத்தை சேர்ந்த துரை மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர்  பழக்கம் இருந்து வந்தது.வரி, சேதாரம்  செய்கூலி, வரி இல்லாமல் தங்க நகைகளை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஜோதியிடம் இருந்து சேலம் தம்பதி  ரூபாய் 4 லட்சம்  வாங்கினர்.  ஆனால் சொன்னபடி  நகை வாங்கி கொடுக்காமல்,  ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து ஜோதி
அரசு மருத்துவமனை போலீசில்  புகார் செய்தாா். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *