சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சுபாஷ் என்ற நபர், தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி நிர்வாக விஷயங்களில் சில அதிகாரிகளை மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெண் உதவி செயற்பொறியாளர் ஒருவர் புகாரின் பேரில், மின்சார வாரிய விஜிலென்ஸ் பெண் இன்ஸ்பெக்டர் செல்வராணி விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையில் சுபாஷ், இன்ஸ்பெக்டர் செல்வராணியிடம் போனில் எனக்கு எதிராக ரிப்போட் கொடுத்தால் தொலைத்து விடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வராணி, சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜாராம் இது தொடர்பாக சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். போலீசார் சுபாஷை தேடி வரும் நிலையில் அவர் மீது ஏற்கனவே மதுரவாயல் போலீசார் ஒரு மோசடி வழககுப்பதிவு செய்துள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி, வேலைவாங்கித்தருவதாக ஏராளமானவர்களிடம் சுபாஷ் பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
