சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் செயல்பாடுகள் அதிக அளவில் உள்ளது. அடிக்கடி அங்கு போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் மோதல் ஏற்படும். இன்று ரிசர்வ் போலீஸ் படையினர் 2 குழுக்களாக பிரிந்து நக்சல் வேட்டைக்கு சென்றனர்.
பீஜப்பூர், கான்கேர் என்ற இடங்களில் இந்த வேட்டை நடந்தது. அப்போது மறைவான பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். போலீசார் திருப்பி தாக்கியதில் 22 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். கங்கலூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. 18 நக்சல்கள் உடல்களை போலீசார் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது X தள பதிவில், 2026 மார்ச் 31க்குள் இந்தியாவில் நக்சலைட்டுகள் இல்லை என்ற நிலை உருவாகும் என கூறி உள்ளார்.