Skip to content

திருச்சி கோவில் விழாவில் ரகளை, ஸ்பீக்கரை உடைத்த 2 பேர் கைது

திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (62). இவர் பூசாரி தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் தலைவராக உள்ளார்.  இந்த கோவில் திருவிழா நடைபெற்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33) மற்றும் கலைச்செல்வன் (29) ஆகியோர் பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதை தட்டி கேட்ட பெரியசாமியை தகாத வார்த்தைகளால் 2 பேரும் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் 2 பேரும் ஸ்பீக்கரை அடித்து சேதப்படுத்தினர். இதுக்குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!