Skip to content

அரியலூர் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்… கோலாகலம்…

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட விளைச்சல் நல்ல மகசூல் கிடைக்கவும், தங்களது விவசாயத்திற்கு உறுதுணையாக உள்ள ஆடு, மாடுகள் பூரண நலத்துடன் விளங்கவும் வேண்டிக் கொண்டு, ஆண்டு திருவிழாவின் போது தங்களது வயலில் விளைந்த தானியங்களையும், ஆடு, மாடுகளையும் காணிக்கையை செலுத்துவது வழக்கம். இதனால் இக்கோவில் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சாவூர், நாகை, சேலம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்களின் குலதெய்வ தளமாக இக்கோவில் விளங்குகிறது. இச்சிறப்பு பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 5ஆம் தேதி ஸ்ரீராமநவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐந்தாம் நாள் திருவிழாவான வெள்ளி கருட சேவையை தொடர்ந்து, ஏழாம் நாள் திருவிழாவான திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. கோவிலில் இருந்து ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட

ஸ்ரீதேவி பூதேவி சமேத அருள்மிகு வரதராஜ பெருமாள் எடுத்துவரப்பட்டு பெரிய தேரில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து, ஆதீன பரம்பரை தர்மகர்த்தா தேரை வடம் பிடித்து இழுக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற நாமக்கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீ ஹனுமான் சிறிய தேர் முன்னே செல்ல, ஸ்ரீதேவி பூதேவி சவேத அருள்மிகு வரதராஜ பெருமாள் வீற்றிருக்கும் பெரிய தேர் நான்கு வீதிகளிலும் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
லட்சக்கணக்கான பக்தர்கள், வரதராஜ பெருமாளை கண்டு தரிசனம் செய்தனர். திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கும்பகோணம், சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ப

error: Content is protected !!