சென்னை நீலாங்கரையில் த.வெ.க. தலைவர் விஜய் வீடு உள்ளது. இன்று தவெக கட்சியின் 2ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் நடப்பதால் அதற்கு கிளம்ப விஜய் தயாராகி கொண்டு இருந்தார். இந்த நிலையில் இன்று காலை விஜய் வீட்டு முன் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக்கொண்டு இருந்தார். திடீரென அவர் தனது காலில் கிடந்த செருப்பை கழற்றி விஜய் வீட்டை நோக்கி வீசினார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபர் போதையில் இருந்தார். கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அவர் விஜய் ரசிகர் என்றும், நடிகர் விஜயை பார்க்க வந்ததாகவும் போலீசில் கூறினார். தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.