சிவகங்கை மாவட்டம், சாலைகிராமம் காவல்நிலைய எஸ்ஐ பிரிட்டோ தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். போலீஸ் ஸ்டேசனில் தற்கொலைக்கு முயன்ற எஸ்ஐ பிரிட்டோவை சக போலீசார்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். சட்டவிரோத மது விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்பி செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.