Skip to content
Home » சந்திராயன் 3 தரையிறக்கம்….இலவச பிரியாணி வழங்கி அசத்தல்…

சந்திராயன் 3 தரையிறக்கம்….இலவச பிரியாணி வழங்கி அசத்தல்…

  • by Authour

உலகமே உற்று நோக்கி இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த மகத்தான பெரும் சாதனைகளை விழி மூடாமல் வியந்து பார்த்தனர் . சந்திரனில் தென் துருவத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான் – 3 நிலை நிறுத்தப்பட்டவுடன், நாடே கொண்டாடி தீர்த்தது. கோவையில் கல்லூரிகள், பொது இடங்களில் பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த வகையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் இயங்கும் மாமு பிரியாணி என்ற பிரியாணி கடையிலெ, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி சந்திரயான்  வெற்றி கொண்டாடப்பட்டது. இந்த கடையின் உரிமையாளரும், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவருமான ஜெ. முகமது ரஃபி, 300க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி இலவசமாக வழங்கினார் . இது

குறித்து பேசிய முகமது ரஃபி, இந்தியா நாடு இன்று உலக அரங்கில் மகத்தான சாதனை புரிந்திருக்கின்றது. இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி இந்திய இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு, நிலவின் தென் துருவத்தில்  சந்திராயன் – 3 விண்கலத்தை தரையிறக்கியிருக்கின்றது .

உலகிலேயே முதல் நாடாக இந்தியா பெருமைக்குறிய இந்த சாதனை செய்தது . இந்தியர்களாக இருக்கின்ற அனைவருக்கும் இது உலக அரங்கில் பெருமைபட வைத்திருக்கின்றது . இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த இந்த சாதனையை இந்தியாவில் உள்ள அனைவரும் கொண்டாடி வருகின்றனர் . இந்த நிலையிலே சந்திரயான்  வெற்றி இந்தியர்களின் மன நிறைவினை தந்த நிலையிலெ, வயிறு நிறைய வேண்டும் என்ற எண்ணத்தில் தாங்கள் நடத்துகின்ற பிரியாணி கடையில், வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி கொண்டாடினோம். இந்தியாவின் இஸ்ரோ செய்த இந்த உலகம் போற்றும் மகத்தான சாதனையில், தமிழக விஞ்ஞானிகள் பெரும் பொறுப்பில் இருந்தது பெரும் மகிழ்ச்சியை சந்ததன.நம் நாட்டின் உலக அளவிலான மரியாதை மென்மேலும் ஓங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *