சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதால் நாடு முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் ஊர்வலம் சென்றனர். திருச்சி கோளரங்கத்தில் சந்திரயான் தரையிறங்குவது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை ஏராளமான மாணவ, மாணவிகள், பொது மக்கள் கண்டுகளித்தனர். அப்போது அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.