தனது ஆவணப் படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ பட காட்சிகளை பயன்படுத்தியதால் ரூ.5 கோடி கேட்டு நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற பெயரில் நயன்தாரா பற்றிய ஆவணப் படம் சமீபத்தில் நெட்பிளிக்சில் வெளியானது. இதில் தனது அனுமதியில்லாமல் தான் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ பட பாடல் காட்சி இடம்பெற்றது தொடர்பாக ஏற்கனவே நடிகர் தனுஷ் வழக்கு தொடுத்தார்.
ஆனால் ‘சந்திரமுகி’ படத்தின் முழு உரிமையும் தற்போது ஏபி பிலிம்சிடம் உள்ளது. சிவாஜி புரொடக்ஷனிடமிருந்து ஏபி பிலிம்ஸ் உரிமைகளை பெற்றுக்கொண்டது. அந்நிறுவனம், தங்களிடம் அனுமதி பெறாமல் சந்திரமுகி காட்சிகளை நயன்தாரா பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் இது தொடர்பாக நயன்தாரா தங்களுக்கு ரூ.5 கோடியை நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.