Skip to content
Home » ஆவணப் படத்தில் சந்திரமுகி காட்சிகள்…ரூ.5 கோடி கேட்டு நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்…

ஆவணப் படத்தில் சந்திரமுகி காட்சிகள்…ரூ.5 கோடி கேட்டு நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்…

  • by Authour

தனது ஆவணப் படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ பட காட்சிகளை பயன்படுத்தியதால் ரூ.5 கோடி கேட்டு நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற பெயரில் நயன்தாரா பற்றிய ஆவணப் படம் சமீபத்தில் நெட்பிளிக்சில் வெளியானது. இதில் தனது அனுமதியில்லாமல் தான் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ பட பாடல் காட்சி இடம்பெற்றது தொடர்பாக ஏற்கனவே நடிகர் தனுஷ் வழக்கு தொடுத்தார்.

இதற்காக ரூ.10 கோடியை அவர் நயன்தாராவிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், தன் மீதான காழ்ப்புணர்ச்சியில் தனுஷ் பழி வாங்குகிறார் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் அதே ஆவணப் படத்தில் ‘சந்திரமுகி’ படத்தில் நயன்தாரா நடித்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. ‘சந்திரமுகி’ படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருந்தது. ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் நயன்தாராவுக்கு காட்டவில்லை.

ஆனால் ‘சந்திரமுகி’ படத்தின் முழு உரிமையும் தற்போது ஏபி பிலிம்சிடம் உள்ளது. சிவாஜி புரொடக்‌ஷனிடமிருந்து ஏபி பிலிம்ஸ் உரிமைகளை பெற்றுக்கொண்டது. அந்நிறுவனம், தங்களிடம் அனுமதி பெறாமல் சந்திரமுகி காட்சிகளை நயன்தாரா பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் இது தொடர்பாக நயன்தாரா தங்களுக்கு ரூ.5 கோடியை நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.