டில்லி்யில் இன்று மாலை நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் டில்லி சென்றுள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபோல ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவும் டில்லியில் நடைபெறும் என்டிஏ கூட்டணி கூட்டத்தி்ல் பங்கேற்க டில்லி சென்றுள்ளார். இருவரும் விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். இருவரும் வெவ்வேறு கூட்டணிகளில் உள்ள நிலையில் இவர்கள் சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வாழ்த்து தவிர, அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் பேசினார்களா என்பது தெரியவில்லை.