திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில சிஐடி பொருளாதார பிரிவு டிஎஸ்பி கைது செய்வதற்கான வார்ண்ட்-ஐ சந்திரபாபுவிடம் வழங்கினார். அதில் ”நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். இதற்கான தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது ஜாமீனில் வரமுடியாத குற்றமாகும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நந்தியாளாவில் உள்ள ஞானபுரம், ஆர்.கே. பங்ஷன் ஹாலில் சிஐடி போலீசார் சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். அப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்காக சிஐடி போலீசாரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்வோம் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.