தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், பரவலாக மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழை இல்லை. இந்த நிலையில் இந்த வார இறுதியில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில் .. தமிழ்நாடு முழுவதும் பரவலாக வருகிற 20-ந் தேதியில் இருந்தும் பருவமழை குறைந்து பனிப்பொழிவு தொடங்கும். அதன் தொடர்ச்சியாக வருகிற 23 (சனிக்கிழமை) அல்லது 24 (ஞாயிற்றுக்கிழமை)-ந் தேதிகளில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ வலுப்பெறலாம். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடையத் தொடங்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.