Skip to content

சாம்பியன்ஸ் டிராபி.. இங்கிலாந்தை வீழ்த்தியது ஆப்கன்..

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் கலந்து கொண்ட போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களில் ஒருவரான ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் கிளீன் போல்டாகி 6 ரன்னில் வீழ்ந்தார். பின் வந்தோரில் செதிகுல்லா அடல் 4, ரஹ்மத் ஷா 4 ரன் எடுத்து ஆர்ச்சர் பந்துகளில் ஆட்டமிழந்தனர். இதனால் 9 ஓவர் முடிவதற்குள் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட் இழந்து 37 ரன் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் இருந்தது. அதன் பின் வந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், முகம்மது நபி ஆகியோருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து மற்றொரு துவக்க வீரர் இப்ராகிம் ஸாட்ரன் ரன் வேட்டையில் ஈடுபட்டார். இப்ராகிம் 177 ரன் குவித்தார். ஷாகிதி 40, ஒமர்ஸாய் 41, நபி 40 ரன் விளாசினர். இதனால், 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழந்து 325 ரன் குவித்தது. ஆர்ச்சர் 3, லியாம் லிவிங்ஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 326 ரன் இமாலய வெற்றி இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. துவக்க வீரர் பில் சால்ட் 12 ரன்னில் ஒமர்ஸாய் பந்தில் கிளீன் போல்டானார். பின் வந்த ஜேமி ஸ்மித் 9 ரன்னில் நபி பந்தில் ஒமர்ஸாயிடம் கேட்ச் தந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் 38 ரன்னில் வீழ்ந்தார். ஹேரி புரூக் 25 ரன்னில் அவுட்டானார். இறுதியில் 326 ரன் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 1 பந்து மீதமிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 317 ரன்களை எடுத்தது. இதனால் ஆப்கான் 8 ரன் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்தில் அதிகபட்சமாக ஜோ ரூட் 120 ரன்(11 பந்து, 1 சிக்சர், 11 பவுண்டரி) விளாசினார். ஆப்கான் அணியில் ஒமர்சாய் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது நபி 2 விக்கெட், பசல்ஹாஹ், ரஷித்கான், குல்பதின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

error: Content is protected !!