திருச்சி உறையூர் கீழ சாராயப்பட்டறை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பகலவன். இவரது மனைவி தாரணி ( 30). இவர் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்து நஷ்டம் அடைந்தார். பின்னர் இது பற்றி திருச்சி மாநகர சைபர் கிரைப் போலீசில் புகார் அளித்தார் . அதன் பின்னர் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கணவர் பகலவன் உறையூர் போலீசில் புகார் செய்தார் . அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.