Skip to content
Home » திருச்சி போதை ஆசாமியிடம்…. செயின், செல்போன் ஆட்டயபோட்ட 3 பேர் கைது

திருச்சி போதை ஆசாமியிடம்…. செயின், செல்போன் ஆட்டயபோட்ட 3 பேர் கைது

  • by Authour

திருவெறும்பூர் அருகே மதுபோதையில் இருந்தவரிடம் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி நடுவழியில் இறக்கி விட்டதோடு அவரிடமிருந்து 2 1/2 பவுன் நகை மற்றும் செல்போனை பறித்து சென்ற மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பர்மா காலனி நேதாஜி தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் ( 44 )இவர் துபாயில்வேலை பார்த்தவர் அண்மையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இவர்  அந்த பகுதியில் காலியிடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார் . அரியமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரவீன் குமார் (24) அரியமங்கலம் மலையப்பன் நகரை சேர்ந்த பஞ்சநாதன் மகன் சத்தியசீலன் (37) வடக்கு காட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பழனி மகன் பிரகாஷ் (24) ஆகிய மூன்று பேரும் அங்கு மது அருந்தி உள்ளனர்.  அளவுக்கு அதிகமாக ரவிக்குமார் போதையான நிலையில் அவரை வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி தங்களது பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றவர்கள் நடுவழியில் அவரை இறக்கி படுக்க வைத்து விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன்  செயின் மற்றும் செல்போனை பறித்து சென்றுவிட்டனர் காலையில் பார்த்த பொழுது தான் ரவிக்குமாருக்கு தனது தங்க சங்கிலி மற்றும் செல்போன் களவு போய் இருப்பது தெரியவந்தது.

இது சம்பந்தமாக ரவிக்குமார் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து  மூன்று பேரையும் கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *