தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது சம்பா பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பருவம் தவறி பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. அந்த நெல்லை அறுவடை செய்தாலும் அதனை ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என கொள்முதல் நிலையதங்களில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
எனவே 22 % ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பத தன்மையை நேரில் அறிய மத்திய குழுவினர் நாளை டெல்டா மாவட்டங்களுக்கு வருகிறார்கள். அவர்கள் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நெல்வயல்கள், மற்றும் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்கிறார்கள்.