சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்திற்கு நேற்று வந்த தனியார் கல்லூரியைச் சேர்ந்த 100 மாணவர்கள், திடீரென கூச்சலிட்டனர். மாணவர்களின் இந்த செயலால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். திடீரென மாணவர்கள் அங்கிருந்த மெட்டல் டிடெக்டர்களை சேதப்படுத்தினர். இந்த நிலையில், ரயில் நிலைய வளாகத்தில் கூச்சல் போட்ட 100 மாணவர்கள் மீது ஆர்பிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரயில்வே சட்டத்தின் 3 பிரிவுகளில் கீழ் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
