Skip to content

மத்திய அமைச்சர் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்…. பிரஸ் மீட்டில் பரபரப்பு…

  • by Authour

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் ஹெச்.டி.குமாரசாமி. இவர் முன்னா பிரதமர் தேவகவுடாவின் இரண்டாவது மகனான இவர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். அந்தவகையில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி வெற்றிபெற்று, தற்போது  மத்திய கனரக தொழில்துறை அமைச்சராக உள்ளார்.

மத்திய அமைச்சர் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்.. பிரஸ் மீட்டில் பேசிக்கொண்டிருந்தபோதே பரபரப்பு.. 

இந்நிலையில் மத்திய அமைச்சர் குமாரசாமி, கர்நாடக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா ஆகியோர் பெங்களூருவில் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது குமாரசாமியின் மூக்கிலிருந்து திடீரென இரத்தம் கொட்டியது.  அவர் கைகளில் இருந்த கைக்குடையை வைத்து மூக்கை  மூடிக்கொண்ட நிலையிலும் ரத்தம் கிடுகிடுவென சட்டைகளும்  வடிந்தது.  இதனை பார்த்து அவரது உதவியாளர்கள் உடனடியாக ஜெய நகராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

மன அழுத்தம் மற்றும் ஓய்வு இல்லாத நேரங்களில் தமக்கு இவ்வாறு மூக்கில் ரத்தம் வடிவது போன்ற பிரச்சனை இருப்பதாக குமாரசாமி தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து பின்னர் வீடு திரும்பினார்.  கர்நாடக முதலமைச்சர் சிதராமையாவின் மனைவிக்கு வழங்கப்பட்ட நிலம் தொடர்பான பிரச்சனை பூதாகரமாகி உள்ள நிலையில்,  அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில் ஆலோசனை நடத்தப்பட்டது.   கூட்டத்தில் குமாரசாமி பங்கேற்றிருந்தார்.  அதன் பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது மூக்கில் ரத்தம் வழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!