Skip to content
Home » தமிழகத்தை சேர்ந்த யார் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி…?

தமிழகத்தை சேர்ந்த யார் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி…?

பிரதமராக மோடி, இன்று மாலை 3வது முறையாக பதவியேற்க உள்ளார். பிரதமர் உடன் 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  குறிப்பாக பா.ஜ.,வை சேர்ந்த ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கும் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், ஜெய்சங்கர், அர்ஜூன் ராம் மேவால், சர்பானந்தா சோனவல், கிரண் ரிஜிஜூ, நிதின் கட்கரி, அஷ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் மீண்டும் அமைச்சர்கள் ஆவார்கள் என தெரிகிறது.
புதிதாக பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா, புரேந்தஸ்வரி, சிவராஜ் சிங் சவுகான்,பாஜ.,வின் சிஆர் பாட்டீல், ராவ் இந்தர்ஜித் சிங், நித்யானந்தராய், பகிராத் சவுத்ரி, ஹர்ஸ் மல்ஹோத்ரா, ஜிதின் பிரசாதா, ரக்ஷா கட்சே, பண்டி சஞ்சய்குமார், கிஷன் ரெட்டி ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.
தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், முருகன் , ஜெயசங்கர் ஆகிய 3 பேரும் அமைச்சர்கள் ஆவார்கள் என தெரிகிறது. தெலுங்கு தேசம், ஐ.ஜ.த., கட்சிக்கு தலா ஒரு மத்திய அமைச்சர் மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கப்படும்.
தெலுங்கு சேத்தின் ராம் மோகன் நாயுடு, சந்திர சேகர் பெம்மசானி
ஐக்கிய ஜனதா தளத்தின் ராம்நாத் தாக்கூர் மற்றும் லாலன் சிங்,
லோக்ஜனசக்தி கட்சியின் சிராக் பஸ்வான்,
ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சியின் ஜித்தன்ராம் மஞ்சி,
அப்னா தள கட்சியின் அனுபிரியா படேல்
ராஷ்ட்ரிய லோக் தள கட்சியின் ஜெயந்த் சவுத்ரி
ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவைச் சேர்ந்த பிரதாப் ராவ் ஜாதவ் ஆகியோர் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஜனசேனா கட்சியை சேர்ந்த தலா ஒருவர் மத்திய அமைச்சர் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *